சனி, 10 ஆகஸ்ட், 2019

ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு ! மேட்டூர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்வு.

கர்நாடகத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்வு.
கர்நாடக மாநிலத்தில் பருவ மழை அதிகமாக உள்ள காரணத்தினால், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் கபினி அணையில் இருந்தும், 25 ஆயிரம் கன அடி நீர் கபினியின் துணை அணையான, தாரகா அணையில் இருந்தும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 500 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.