புதன், 7 ஆகஸ்ட், 2019

சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி !

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, சுஷ்மா உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் அனைவரும் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி பிறகு மாலையில் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.