சனி, 10 ஆகஸ்ட், 2019

பவானி ஆற்றில் வெள்ளம்: பொதுமக்கள் வேடிக்கை பார்க்க, செல்பி எடுக்க தடை...

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பெருக்கால் ஆற்றுப் பாலத்தில் பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மழை காரணமாக பில்லூர் அணை மொத்த கொள்ளவான 100 அடியில் 97.5 அடி வரை தண்ணீர் தேக்கபட்டு பின்னர் அனையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியே 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. 

இதனால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு ஜந்தாவது நாளாக மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பவானி ஆற்று வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஆற்றின் நீர் வரத்து குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பவானி ஆற்று பாலம், சாமண்ணா வாட்டர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.