புதன், 7 ஆகஸ்ட், 2019

சந்திரயான்-2 விண்கலம் 5-வது சுற்றுவட்டப்பாதையில் தன் பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் 5-வது சுற்றுவட்டப்பாதையில் தன் பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புவியின் கடைசி சுற்றுவட்டப்பாதையை நோக்கி செல்லும் பயணத்தை சந்திரயான்-2 விண்கலம் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

4-வது சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான்-2, புவியின் 5-வது சுற்று வட்டப்பாதையை நோக்கி செல்கிறது. புவியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு மாற்றி அமைக்கும் Trans Lunar Insertion முறை ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிற்பகல் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.