வியாழன், 18 ஜூலை, 2019

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சென்னையில் காலமானார்.

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சென்னையில் காலமானார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். இதனால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடைந்தார்.ஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜகோபால், சரணடைய வரும்போதே ஆம்புலன்சில்தான் வந்தார். பிறகு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது. இதன்காரணமாக சிறைக்கே போகாமல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது. ஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமாகி கொண்டே வந்தது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதி தவிர உயர்ந்த சிகிச்சை வசதிகள் இல்லை என்பதாலும், அதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. இதையடுத்து, அண்ணாச்சியை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதித்தனர். ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே இன்று காலை ராஜகோபால் உயிர் பிரிந்தது.

நன்றி ஒன் இந்தியா !