செவ்வாய், 16 ஜூலை, 2019

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை பாகிஸ்தான் அரசு நீக்கியது!

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை பாகிஸ்தான் அரசு நீக்கியது! 

இந்திய பயணிகள் விமானங்கள் பறக்க தனது எல்லையை பாகிஸ்தான் அரசு திறந்துவிட்டுள்ளது. பாலகோட் தாக்குதல் காரணமாக ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த பிப்ரவரியில் இருந்து இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து இருந்தது.காஷ்மிரில் பயங்கரவாத தாக்குதலால் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இந்திய எல்லையை ஒட்டிய பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ்-இ- முகமது தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தன.

பாகிஸ்தான் உத்தரவு
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், அந்நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக பாகிஸ்தான் தனது வான்வெளியை திறக்க மறுத்துவிட்டது. 

மொத்தம் 11 வழித்தடம்
எனினும் கடந்த மே 31ம் தேதி மொத்தம் 11 ரூட்களில் 2 வழித்தடங்களுக்கு மட்டுமே திறக்க தற்காலிக அனுமதி அளித்தது. அதேநேரம் மற்ற 9 வழித்தடங்களை திறந்துவிடவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மிகநீண்ட தூரம் பயணிகள் விமானங்கள் சுற்றி சென்றன. 

மத்திய அரசு தகவல்
பாகிஸ்தான் தன் வான்வெளியை திறக்க அனுமதிக்காத காரணத்தால் கடந்த ஜுலை 2ம் தேதி நிலவரப்படி இந்திய விமானங்களுக்கு 491 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ராஜ்யசபாவில் தெரிவித்து இருந்தது. தனியார் விமான நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, கோ ஏர், உள்ளிட்டநிறுவனங்களுக்கு முறையே ரூ.30.73 கோடி, ரூ.25.1 கோடி., ரூ.2.1 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. 

இண்டிகோ இயக்கவில்லை
இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ டெல்லியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு கடந்த மார்ச் முதல் விமானங்களை இயக்கவே இல்லை.இந்திய விமானங்கள் பறக்கலாம்
இந்நிலையில் இன்று அதிகாலை 12.41 முதல் இந்திய பயணிகள் விமானங்கள் அனைத்தும் பாகிஸ்தான் வான்வெளி வழியாக வெளிநாடுகளுக்க செல்ல அந்நாட்டு அரசு அனுமதித்தது. இதன் மூலம் ஐரோப்பியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்க நாடுகளுக்கு இந்திய விமானங்கள் இனி எளிதாக செல்ல முடியும்.பயண தூரம் குறையும்.


நன்றி ஒன் இந்தியா!