வெள்ளி, 19 ஜூலை, 2019

மேற்க்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க தடை....

மேற்க்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க தடை....

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றால மெயின் அருவியில் வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மெயின் அருவியில் வளைவைத் தாண்டி வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட முடியாமல் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர்.