திங்கள், 29 ஜூலை, 2019

ஒரே போனில் இரண்டு நம்பர்களிலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டுமா?

ஒரே போனில் டூயல் வாட்ஸ் ஆப். எப்படி தெரியுமா?? ஒரே போனில் இரண்டு நம்பர்களிலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டுமா? அதற்கான வழிமுறைகளை தெரிந்துங்கொள்ளுங்கள். தற்போது வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் டூயல் சிம் கொண்டுள்ளது. ஒரு போனில் டூயல் சிம் பயன்படுத்தும் போது டூயல் வாட்ஸ் ஆப் கணக்கையும் வைத்துக்கொள்ளலாம். இதோ அதன் வழிமுறைகள். 1. உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்க்ஸ் ஓபன் செய்யவும், 

2. அதில் Advance Features அல்லது Additional Settings க்ளிக் செய்யவும், 

3. இப்போது டூயல் மெசேஞ்சர் என்ற ஆப்ஷனில் வாட்ஸ் ஆப் தேர்வு செய்யவும், 

4. இம்மாதிரியான செட்டிங்ஸ் இல்லையென்றால், மீண்டும் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Dual App என்பதை க்ளிக் செய்து, வாட்ஸ் ஆப்பை தேர்வு செய்யவும் 

5. இப்போது புதிதாக மற்றொரு வாட்ஸ்அப் ஸ்மார்ட்போன் மெனுவில் தோன்றும், 

6. அதை இன்ஸ்டால் செய்து புதிய நம்பர் மூலம் புதிய வாட்ஸ் ஆப் கணக்கை க்ரியேட் செய்யலாம். இது எதுவும் செட் ஆகவில்லை என்றால் சிம்பிளாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Parallel, Dual App Wizard, Double App போன்ற ஆப்களை கொண்டு டூயல் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்.