புதன், 17 ஜூலை, 2019

சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு !

சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுவையில் கடலோர மற்றும் மேற்குத்தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.