திங்கள், 15 ஜூலை, 2019

தொழில் நுட்பகரணமாக சந்திராயன் -2 நிறுத்திவைப்பு ! விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படம். - இஸ்ரோ

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.978 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தை பாகுபலி என்று அழைக்கப்படும் மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்க தொடங்கியது.  

A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, launch has been called off for today. Revised launch date will be announced later. - ISRO

இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 56 நிமிடங்கள் முன்னதாக, அதாவது 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. 

ஏவுகணையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்களம் நிறுத்தப்படுவதாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. மேலும் சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் ஏவப்படும் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.