திங்கள், 29 ஜூலை, 2019

பணித்திறன் போட்டிகளில் முதலிடம் பிடித்த தமிழக காவல்துறை !

பணித்திறன் போட்டிகளில் முதலிடம் பிடித்த தமிழக காவல்துறை !

காவலர்களுக்கான அகில இந்திய பணித்திறன் போட்டிகள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில், அறிவியல் சார்ந்த புலனாய்வு திறன், விரல் ரேகை, கூர்நோக்கு, மோப்பநாய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 22 மாநிலங்களை சேர்ந்த காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில், அதிக பதக்கங்களை வென்று தமிழக காவல்துறையினர் முதலிடம் பிடித்து அசத்தினர். பதக்கம் வென்ற காவல்துறையினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.