திங்கள், 22 ஜூலை, 2019

மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் !

தகவல் அறியும் உரிமை சட்டத்தைத் திருத்தும் மசோதா எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்தநிலையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.