செவ்வாய், 30 ஜூலை, 2019

தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது தபால் துறை தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு விசாரணையின் போது, தபால் துறை தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மே 10ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வெழுதலாம் என்ற உத்தரவு தொடரும் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நியூஸ் ஜே !