வியாழன், 18 ஜூலை, 2019

குல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

குல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஜாதவின் பாதுகாப்பிற்கும், விரைவில் அவரை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டுவருவதற்கும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதிபட தெரிவித்தார். ஜாதவ் தொடர்பான வழக்கில், சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்தியாவிற்கு சாதகமானது மட்டுமல்ல என்றும், சட்ட விதிகளை மதிப்பவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும், சர்வதேச தீர்மானங்களின் புனிதத் தன்மையும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில் கொண்டு, ஜாதவை பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

நன்றி நியூஸ் ஜே !