திங்கள், 22 ஜூலை, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, 2 மாத பயிற்சிக்காக பாராமிலிட்டரி ரெஜிமெண்ட்டில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, 2 மாத பயிற்சிக்காக பாராமிலிட்டரி ரெஜிமெண்ட்டில் இணைந்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி, ராணுவத்தில் பயிற்சி பெற முடிவு செய்தார். இதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவர், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சிக்காக ராணுவ முகாமிற்கு வந்த தோனிக்கு ராணுவ அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.