திங்கள், 22 ஜூலை, 2019

சந்திரயான் 2 - வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து !

சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நிலவில் தென் துருவ பகுதியை சந்திரயான்-2 முதல் முறையாக ஆய்வு செய்யவுள்ளதாகவும், இதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் வெற்றி நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் என்றும், வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிதமர் மோடி கூறியுள்ளார். இதேபோன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் சந்திரயான் 2 வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.