புதன், 31 ஜூலை, 2019

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விளையும் மலைப்பூண்டுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு !

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விளையும் மலைப்பூண்டுக்கு, மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமப் பகுதிகளில், மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டு பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பின் இந்த மலைப்பூண்டிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

இதன் மூலம் புவிசார் குறியீடு எண்ணிக்கையில், கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகம் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம் மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டிற்கு உலகளவில் அதிக வரவேற்பு இருக்கும் என்றும், இதனால் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.