வெள்ளி, 19 ஜூலை, 2019

நாளை முதல் 29 தேதி வரை, 11 நாட்கள் - புத்தகத் திருவிழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

அரியலூரில் நாளை தொடங்கவிருக்கும் புத்தகத் திருவிழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.  அரியலூரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா, ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. நாளை முதல் 29 தேதி வரை, 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.


மாலை நேரங்களில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.