புதன், 26 ஜூன், 2019

Wi-Fi/Hotspot மூலமாக இணையதளம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை !

தற்போது பெரும்பாலும் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன் உபயோகிக்கும் மக்கள் Wi-Fi/Hotspot மூலமாக இணையதளம் பயன்படுத்திகிறார்கள். அதிகமாக ஹோட்டல், காபி கடை, ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்களில் Wi-Fi இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் பயன்படுத்தும் இணையதளத்தால் மக்களுக்கு பெரும் ஆபத்து உள்ளது. தகுந்த பாதுகாப்பு இல்லாத Wi-Fi உபயோகிக்கும் பொழுது நம்முடைய அணைத்து விவரங்களும் தவறான முறையில் பறிமுதல் செய்ய முடியும். அதை தடுப்பதற்கு சில வழி முறைகள் உள்ளன.  


  • அதிகம்  ஸ்மார்ட்போன்கள் கம்பில்லா(wireless) பாதுகாப்புகளால் பாதிக்கப்படுகின்றன.
  • அறியாத நபரின் Wi-Fi யை போனில் இணைப்பதை தவிர்க்கவும்.
  • எந்த பொது இடங்களில் Wi-Fi உபயோகித்தாலும் அவற்றின் இணைப்பு பெயர் மற்றும் IP முகவரியை உரிமையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். பின்னர் உபயோகிக்கவும.
  • மெய்நிகர் தனியார் பிணையம்(VPN) மூலம் இணையதளம் உபயோகித்தால் cyber criminal-லிருந்து பாதுகாக்கலாம்.
  •  தனிப்பட்ட தகவல், சமூக வலைப்பின்னல் தளங்கள், ஆன்லைன் வங்கி சேவைகள் போன்றவை  பொது Wi-Fi  மூலம் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
  • இணையதளத்தில் உள்ள அணைத்து தகவல்களையும் பாதுகாப்பு தீர்வால்  பாதுகாத்து வைக்கவும்.