சனி, 22 ஜூன், 2019

ரூ.50 லட்சம் வரை கடன் .. பிணையமா எதுவும் வேண்டாம்.. Mudra-திட்டத்துக்கு ராம் நாத் கோவிந்த் ஆதரவு!

டெல்லி : இந்தியாவில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், தொடர்ந்து புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் மோடி 2.0 அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜானாபதி ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தொழில் முனைவோரை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பிணையமில்லா கடனாக ரூ.50 லட்சம் வரை வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு இது விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் கருதப்படுகிறது. 

இது முன்னர் Mudra திட்டத்தில் மூன்று பிரிவுகளில் தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கி வருகின்றது. பிணையம் இல்லா கடன் முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ. 50,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ரூ.20 லட்சம் வரை இந்த பிணையமில்லா இந்த கடனை உயர்த்த பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இதை ரூ.50 லட்சம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது தொழில் முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முத்ரா தொழில் முனைவோருக்கானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency மூலமாக செயல்படுத்தபடுகிறது. இது ஒரு மத்திய அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு திட்டமாகும். கடந்த 2015-16 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 

தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன் குறிப்பாக குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. அதில் சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய மூன்று திட்டங்களின் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தில் 30 கோடிபேர் பயன் அதோடு இந்த திட்டத்தை விரிவு படுத்துகையில் ராம் நாத் கோவிந்த் சிங் கூறுகையில், இந்த முத்ரா திட்டத்தை விரிவு படுத்துகையில் 30 கோடி மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள் என்றும், அதிகாரபூர்வமான தகவல்களின்படி 6.56 மில்லியன் கடன்கள் வழங்கப்பட்டுள்ளனவாம். இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் 32,457 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முத்ரா திட்டத்தில் பயனர்களை அதிகரிக்க திட்டம் இது கடந்த ஏப்ரல் முதல் 2018 - 2019 ஆம் ஆண்டில் மட்டும் 3.11 டில்லியன் மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டுள்ளனவாம். இதுவே முன்னர் 2.46 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாம் மத்திய அரசு. 

ஜன் தன் திட்டம் அதோடு அனைத்து வீடுகளுக்கும் வங்கி கணக்கு சேவையை கிடைக்க செய்யும் ஜன் தன் திட்டத்தை அமல்படுத்திய பின்பு, அரசு அனைத்து கிராமங்களிலும் வங்கி சேவையை வழங்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த சேவையை கொண்டு சேர்க்கவும், குறிப்பாக வட கிழக்கு பகுதிகளிலும் கூட வங்கிச் சேவையை கிடைக்க உறுதி செய்வதற்காக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வீட்டின் வாசலுக்கே வங்கி சேவை அதோடு இந்தியா போஸ்ட் வங்கிகள் மூலம் இந்த சேவைகள் கிடைக்க நாட்டில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் தயாராகி வருகின்றன. அதோடு ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கே வங்கிச் சேவையை கொண்டு வர தபால்காரரை ஒரு மொபைல் வங்கியாக பயன்படுத்துவதே இதன் குறிக்கோள் என்றும் கூறியுள்ளார் ராம் நாத் கோவிந்த்.

நன்றி ஒன் இந்தியா !