சனி, 22 ஜூன், 2019

ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலிக்கு அட்டகாசமான டார்க் மோடு தீம்!

மொபைல் OS வரலாற்றில், இந்த 2019 ஆம் டார்க்கஸ்ட் வருடமாகக் கருதப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட டார்க் தீம்களும், டார்க் மோடு ஆப்ஷன்களும் தான் என்பதே உண்மை. டார்க் மோடு சேவையின் மீது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அதீத ஈர்ப்பு உள்ளது என்று தன சொல்லியாக வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS டார்க் மோடு இந்த ஆண்டு டார்க்கஸ்ட் வருடமாக இருந்ததற்கு, ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு இயங்குதளங்களும் போட்டியிட்டு டார்க் மோடு சேவையைத் தனது ஆப்ஸ்களுக்கும், இயங்குதள சேவைகளுக்கும் அறிமுகம் செய்தது தான். ஜிமெயில் சேவைக்கு டார்க் மோடு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இரண்டும் தங்களின் அனைத்து ஆப்களிலும் டார்க் மோடு சேவையை அறிமுகம் செய்ய இன்னும் மும்முரமாகப் பல முயற்சி செய்து வருகிறது. தற்போதைய புதிய டார்க் மோடு அப்டேட் ஜிமெயில் சேவைக்கு வழங்கப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷன் அப்டேட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இடுப்பினும் சில பயனர்களுக்கு பீட்டா வெர்ஷன் அப்டேட்டில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட சோதனையில் உள்ள இந்த புதிய அம்சம் வெகு விரைவில் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி  ஒன் இந்தியா !