திங்கள், 3 ஜூன், 2019

டிகிரி முடித்தவர்களுக்கு பி.எஃப். நிறுவனத்தில் உதவியாளர் வேலை

டிகிரி முடித்தவர்களுக்கு பி.எஃப். நிறுவனத்தில் உதவியாளர் வேலை
280 உதவியாளர் (Assistant) காலிப் பணியிடங்களுக்குத் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் நிலைத் தேர்வு ஜலை 30 மற்றும் 31ல் நடக்கும். இதற்கான அட்மிட் கார்டு ஜூலை 20 முதல் 30 தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும்.ஹைலைட்ஸ்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர் பணி
விண்ணப்பித்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 25
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation) epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்ய கடைசி தேதி ஜூலை 10. விண்ணப்பித்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 25. விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசம் மே 30 முதல் ஜூன் 25 வரை. 

280 உதவியாளர் (Assistant) காலிப் பணியிடங்களுக்குத் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் நிலைத் தேர்வு ஜலை 30 மற்றும் 31ல் நடக்கும். இதற்கான அட்மிட் கார்டு ஜூலை 20 முதல் 30 தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும்.


விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவினர் மற்றும் ஈ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.250. 

வயது வரம்பு

25-06-2019 அன்று 20 வயதுக்கு மேற்பட்டவராகவும் 27 வயது பூர்த்த ஆகாதவராகவும் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி

25-06-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.