ஞாயிறு, 2 ஜூன், 2019

நம்மிடமே இருக்கு மருந்து! - சின்ன வெங்காயத்தின் பயன்கள்!

ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு, இதய நோய் பிரச்னை உள்ளோர், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், ஜலதோஷம் குறைவதுடன், அடிக்கடி வரும் தும்மலும் நின்று விடும். 

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளோர் மற்றும் மூல நோயால் அவதிப்படுவோர், இதை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.



பொடுகு தொல்லை, முடி கொட்டுதல், தலை பகுதியில் வழுக்கை விழுந்தவர்கள் மற்றும்முடி முளைக்காமல் இருப்போர், சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால், காலப்போக்கில் முடி முளைக்கும். 

தேள் கொட்டிய இடத்தில், சின்ன வெங்காய சாறை தேய்த்தால், விஷம் ஏறாது. நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து, அதனுடன், சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். 

வெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட்டு வந்தால், காது இரைச்சல் மறையும்.
வெங்காய நெடி, தலைவலியை குறைக்கும். இதை வதக்கி சாப்பிட்டால், உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு நீங்கும். மேலும், இதன் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். மோரில், வெங்காய சாற்றை விட்டு குடித்தால், இருமல் குறையும்.

சிறிய வெங்காயத்தில், இன்சுலின் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள், இதை அதிகமாக பயன்படுத்தலாம். சின்ன வெங்காய சாறு, கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது. இதை, ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி அடையும், மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.