ஞாயிறு, 24 மார்ச், 2019

WhatsApp Business: ஐபோனில் அறிமுகமானது வாட் ஆப் பிஸ்னஸ் அப்டேட்!

ஆண்டிராய்டு போனக்ளில் சென்ற ஆண்டே அறிமுகமான வாட் ஆப் பிஸ்னஸ் தற்போது ஐபோன்களில் அறிமுகமாகி உள்ளது. மேலும் இது பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் மட்டுமே தற்போது அறிமுக மாறியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. 


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண்டிராய்டு போன்களில் வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அறிமுகமானது. மேலும் இந்த வாட்ஸ் ஆப் வெர்ஷன் எப்போது ஐபோனில் அறிமுகமாகும் என்று ஐபோன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது ஐபோனில் வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அறிமுகமாகி விட்டது என்று செய்திகள் பரவி உள்ளது.

மெக்சிக்கோ, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த அப்டேட் பரவலாக வெளியாகி உள்ளது என்று தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த நாடுகளில் இதை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் இது எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.

ஆனால் இதுதொடர்பாக வாட்ஸ் ஆப் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்த வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் மூலம் வணிகம் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் தங்களது தயாரிப்புகள் மற்றும் இதர தகவல்களைப் பகிர முடியும் எனப்படுகிறது. இதுவரை சுமார் 5 மில்லியன் மக்கள் இதைப் பயன்படுத்தி வருவதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.


நன்றி தமிழ் சமயம் !