Business

தமிழ் வாழ்க !


இன்றைய 7-ஜூன்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 73.70 (லி) | டீசல் ரூ 68.66 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3115 | 24 காரட் 1கி ரூ 3393 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 39550 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.21

2019 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12வது சீசன் இன்று துவங்கவுள்ளது.

2014ம் ஆண்டு தான் கடைசியாக ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சேப்பாக்கத்தில் ஆர்சிபி 2008ம் ஆண்டு தான் வென்றது. அதற்கு பின் வென்றதே இல்லை.


2019 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12வது சீசன் இன்று துவங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி தலைமையிலான ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதவுள்ளது.

2014ம் ஆண்டு தான் கடைசியாக ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சேப்பாக்கத்தில் ஆர்சிபி 2008ம் ஆண்டு தான் வென்றது. அதற்கு பின் வென்றதே இல்லை. இந்த போட்டி ஆர்சிபியின் அதிரடி வீரர்களுக்கும், சிஎஸ்கேவின் சிக்கன பந்துவீச்சாளர்களுக்குமான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியை பொறுத்தமட்டில் பலவீனம் என்பது வேகப்பந்துவீச்சு மட்டும்தான். இங்கிடி காயம் காரணமாக வெளியேறியுள்ளார். டேவிட் வில்லேயும் தாமதமாக அணியில் இணைகிறார். அதனால் சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு ஷரதுல் தாக்கூர் மற்றும் மோஹித் ஷர்மாவை நம்பியே உள்ளது. வாட்சன் மற்றும் ப்ராவோ நடுவரிசையில் கைகொடுப்பார்கள்.

அதேசமயம் பலமான ஸ்பின்னர்களை சி.எஸ்.கே கொண்டுள்ளது. ஜடேஜா கட்டாயம் அணியில் இடம்பெற வேண்டும். அவருக்கு பலம் சேர்க்கும் விதமாக தாஹிர், சாண்ட்னர், கரண் ஷர்மா மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இருப்பார்கள். டூப்ளெசிஸ், தாஹிர், சாண்ட்னர் வெள்ளியன்று அணியில் சேர்வதால் அவர்கள் உடனடியாக அணியில் இடம்பெறுவது சந்தேகமே.

பேட்டிங்கை பொறுத்தமட்டில்  ஜாதவ், ராயுடு உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதற்காக சிறப்பாக ஆடுவார்கள். தோனி, ரெய்னாவை அதிகம் நம்பி களமிறங்கும் சிஎஸ்கே என்று எதிர்பார்க்கலாம்.

முதல் போட்டியை பொறுத்தமட்டில் குறைவாக ஸ்கோர் செய்யும் நாளாகவே அமையும். ஆர்சிபியை பொறுத்தமட்டில் ஷால்லை பெரிதும் நம்பியுள்ளது. மொயின் அலி, பவன் நஹி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தனது பங்களிப்பை தருவார்கள். கோல்டர்நைல் , உமேஷ் யாதவ், சிராஜ் பந்துவீச்சை பலப்படுத்துவார்கள்.

ஆர்சிபி பேட்டிங்கை பொறுத்தமட்டில் ஹிட்மேயர், க்ளாசன், க்ராண்தோம் ஆகியோர் அதிரடி காட்டி கோலி, டிவில்லியர்ஸை பெரிதும் நம்புகிறது ஆர்சிபி.

அணி விவரம்:

சிஎஸ்கே:

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ், ஆசிப்

ஆர்சிபி:

கோலி, உமேஷ், பார்த்திவ் பட்டேல், ஏபி டிவில்லியர்ஸ், சவுத்தி, மொயின் அலி, கோல்டர் நைல், சஹால், க்ராண்தோம், பவன் நஹி, குர்கீரத் சிங், அக்ஷதீப் நாத், மிலிண்ட் குமார், ஸ்டோனின்ஸ்ம் நவ்தீப் சைனி, ஷிம்ரான் ஹெட்மேயர், க்ளாஸன், ஹிம்மட் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, கெஜ்ரோலியா, தேவ்டட் படிக்கல், பர்மன்
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்