Business

தமிழ் வாழ்க !


இன்றைய 21-மார்ச்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.52 (லி) | டீசல் ரூ 70.50 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,056 | 24 காரட் 1கி ரூ 3,336 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 41,500 | டாலர் மதிப்பு 1$ = ரூ 68.60

வாங்க..மனதோடு பேசலாம்....!!

வாங்க..மனதோடு பேசலாம்....!! 


பாசகுரு தவத்தில் இருந்தார் அவரகே இருந்த சீடன் அவர் கண் திறப்பைக் கண்டு....!

குருவே...கஷ்டம் வர காரணம் யார்....! 
கேட்ட சீடனின் கண்களைக் கண்டார் குரு . சீடனின் கண்கள் குழப்பத்தின் உச்சத்தில்
இருந்தன....!

மனிதர்கள் குரங்கைப் பிடிப்பதற்கு குடத்தைப் பயன்படுத்துவர். அந்தக் குடத்தில் கடலை மிட்டாய் மற்றும் தேங்காய் சில்லுகளைப் போட்டு  வைத்து குரங்கு இருக்கும் இடத்தில் வைத்து விடுவர்.

 குரங்கு மிட்டாய் வாடையைக் கண்டு
அதை எடுப்பதற்கு கையை உள்ளே விடும்
மிட்டாயைப் பிடித்துக் கொண்டு கையை வெளியே எடுக்க முயலும் ஆனால் முடியாது....!

குடத்தின் முகப்பு தட்டும்..ஆனால் மிட்டாயை குடத்துக்குள் போட்டு விட்டு கையை எடுத்தால் வந்து விடும்....

ஆனால் அது குரங்குக்கு தெரியாது...மிட்டாயின் மேலே மனதை வைத்துள்ளதால் குரங்கு பிடியை விடாமல் மாட்டிக் கொண்டு பிடிபடும்...!

பாசகுரு  தொடர்ந்தார்....

குரங்கு போல் மனிதர்களும் கஷ்டத்தை விடாமல் கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்...!

கஷ்டத்திற்கு காரணம்
எது குருவே....?

ஆசையும் தானென்ற கர்வமே காரணம்....
மனிதர்கள் எதையாவது ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு அதற்காகவே வாழ்வை வீணடிக்கிறார்கள்...!!
குரங்கைப் போல.


 .. இன்னும் பேசுவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்