Business

தமிழ் வாழ்க !


இன்றைய 7-ஜூன்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 73.70 (லி) | டீசல் ரூ 68.66 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3115 | 24 காரட் 1கி ரூ 3393 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 39550 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.21

(கடைசி தேதி : 22.03.2019) LIC - லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் பல்வேறு பணியிடங்கள் கடைசி தேதி : 22.03.2019

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள உதவி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 590 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 



நிர்வாகம் : லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) 

மொத்த காலிப் பணியிடங்கள் : 590 

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம்: 

பொது உதவி நிர்வாக அதிகாரி - 350 

ஐடி உதவி நிர்வாக அதிகாரி - 150 

சிஏ உதவி நிர்வாக அதிகாரி - 50 

காப்பீடு மற்றும் கணக்கு உதவி நிர்வாக அதிகாரி - 30 

உதவி நிர்வாக அதிகாரி (ராஜ்பாஷா) - 10 

கல்வித் தகுதி : 

பட்டதாரிகள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும். எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரைவுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும் முடித்தவர்கள் ஆக்சுவரியல் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு : 01.03.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் : மாதம் ரூ.32795- 1610(14) -55335- 1745(4) -62315 + இதர சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : 

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இருகட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : 

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். 

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : www.licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.licindia.in/getattachment/59fa2d3e-40ad-4c4b-916d-95a58ee64123/Recruitment-of-Assistant-Administrative-Officer-20 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்