வியாழன், 21 மார்ச், 2019

2019 சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் 368 பதக்கங்கள் வென்று சாதித்துள்ளனர்.

டெல்லி : 2019 சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் 368 பதக்கங்கள் வென்று சாதித்துள்ளனர். ஐக்கிய அரபு நாட்டின், அபு தாபி நகரில் மார்ச் 14 முதல் 21 வரை நடைபெற்ற கோடை கால சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 284 வீரர்கள் அடங்கிய இந்திய விளையாட்டு வீரர்கள் குழு 368 பதக்கங்களை அள்ளியுள்ளது. இவற்றில் 85 தங்கம், 154 வெள்ளி, 129 வெண்கலப் பதக்கங்கள். இவற்றில் பவர்லிஃப்டிங் விளையாட்டில் 96 பதக்கங்கள் கிடைத்தது. அடுத்து, ரோலர் ஸ்கேட்டிங்கில் 49, சைக்கிளிங்கில் 45, தடகளத்தில் 39 பதக்கங்கள் கிடைத்தன. இந்த ஒலிம்பிக் போட்டியில் 190 நாடுகளில் இருந்து 7500 சிறப்பு மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளார்கள்.

நன்றி MyKhel- தமிழ் !