ஞாயிறு, 24 மார்ச், 2019

வேட்பாளர்களுக்கு உதவும் தேர்தல் ஆணையத்தின் 'சுவிதா' மொபைல் ஆப்

கட்சிகளுக்கும் வேட்பாளர்ளுக்கும் வழிகாட்டும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.

17வது மக்களவையைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பதற்கும் புகார்களை தெரிவிப்பதற்கும் ‘cVIGIL’ என்ற மொபைல் அப்ளிகேஷனை அளிக்கிறது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கும் உதவி செய்ய சுவிதா (Suvidha) என்ற அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேடை அமைத்து பிரசாரம் செய்யவும், வாகனங்களில் பிரசாரம் செய்யவும், கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடத்தவும் சுவிதா (Suvidha) அப்ளிகேஷன் உதவுகிறது.



இதன் மூலமாக ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்யும்போது தகவல்கள் உடனடியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை கண்கணிப்பாளர் ஆகிய மூவருக்கும் சென்றுவிடும். அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் கட்சிகள் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறக்கவும் இந்த ஆப் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.