பியுஷ் கோயல் மத்திய இடைக்கால பட்ஜெட் 2019 ஐதாக்கல் செய்து பேசியதாவது;

பியுஷ் கோயல் மத்திய இடைக்கால பட்ஜெட் 2019 ஐதாக்கல் செய்து பேசியதாவது;

இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் 239 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடாக பெற்றுள்ளது.

3 லட்சம் கோடியை திரும்பப் பெற்று உள்ளதன் மூலம் இந்தியாவின் வங்கித் துறை திடமாக உள்ளது.


இந்தியா கழிப்பிட வசதியில் சாதனை செய்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்திற்காக ஒத்துழைத்த இந்தியர்களுக்கு நன்றி.

98% க்கும் அதிகமாக கிராமப்புற சுகாதாரப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 5.45 லட்சம் கிராமங்கள் வெளி இடங்களில் கழிப்பதில் இருந்து விடுபட்டுள்ளது.

அனைவருக்கும் உணவு என்பதற்காக 1.7 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியது.

2019 மார்ச்க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைக்கும் செயல்கள் நடந்து முடிந்துவிடும்.

143கோடி எல்ஈடி பல்புகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1.53 கோடி வீடுகள் பிரதான் மந்திரி யோஜனா மூலம் கட்டப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான பயிர் விலையை  1.5 மடங்கு உயர்த்தி உள்ளது இந்த அரசு.

22 வது எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஹரியானாவில் அமைக்கப்பட உள்ளது.

2 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள விவசாயிகளுக்கு  ஆண்டுக்கு 6000ரூபாய் வருவாயாகக் கிடைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் வீதமாக மூன்று தவணையாக இது வழங்கப்படும் . இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பலன் பெறுவர். இதற்காக 75,000 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது அரசு.

உணவு மானியம் இரட்டிப்பாகி உள்ளது.

ராஷ்டிரிய கோகுல் மிஷனுக்காக கூடுதலாக 750 கோடியை ஒதுக்கி உள்ளது.

2% வட்டியில் மீன் வளர்ப்பிற்காக உதவித்தொகை அளிக்கப்படும்.

2% வட்டியில் இயற்கை பேரிடரின் போது உதவித் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் முறையாக கடனை செலுத்தினால் 3% அளவிற்கு உதவித் தொகை அளிக்க முடிவு செய்துள்ளது அரசு.

மீன் வளத் துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்பட உள்ளது.

வரி விலக்கு நன்கொடை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 3000 ரூபாய் ஓய்வூதியமாக பெற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா ஊழியர்களுக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கப்படும்.

8 கோடி இலவச காஸ் இணைப்புகள் கிராமங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

70% க்கும் அதிகமாக பெண்கள் முத்ரா யோஜனா மூலம் பலன் அடைந்துள்ளனர்.

கிராமப்புற பெண்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தய் உள்ளது அரசு.

உஜ்வாலா திட்டத்தில் 8 கோடி வீட்டு உபயோகப்பொருட்கள் கிடைக்க வழி செய்யப்படும்.

பேர்கால விடுப்பாக 26 வாரங்களை பிரதான் மந்திரிமாத்ரிவ யோஜனா மூலம் பலன் கிடைக்கச் செய்துள்ளது அரசு.

ஒரு கோடி கடனை 59 நிமிடங்களுக்குள் கிடைக்க வழி செய்துள்ளது.

கிராஜுவிட்டி லிமிட்டானது 10 லட்சத்திலிருந்து  30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன் ராங் ஒன் பென்சன் கீழ் 35,000 கோடி ரூபாய் வீரர்களுக்கு வழங்கப்பட்டுளளது.

இந்திய பாதுகாப்பு துறைக்காக 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 27 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உலகத்தில் இந்தியாவில் மட்டுமே இத்தனை வேகத்தில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் சம்பளம் 42% உயர்ந்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மக்களுக்கு பாத்கப்ப்பு, விரைவான சேவையை வழங்கும்.

50% க்கும் அதிகமாக மொபைல் டேட்டா , மொபைல் நுகர்வுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து வருடத்திற்குள் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்க வழிவகைகள் செய்யப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21% அதிகரித்துள்ளது அரசு.

58116 கோடி தொகையை வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிகமாக செய்துள்ளது அரசு.

இந்தியாவின் வரி அதிக அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது. 80% அளவிற்கு வரி செலுத்துதல்  கூடி உள்ளது.

24 மணி நேரத்தில் வரி செலுத்துதல் மற்றும் திரும்பப்பெறுதல்  சேவை நடந்து முடிக்க வழி செய்யப்படுகிறது.

நடுத்தர மக்களுக்கான சுமையைக் குறைக்க அரசு பாடுபடுகிறது.

ஜிஎஸ்டி கீழ் சராசரியாக மாதத்திற்கு 97000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்று உள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் கருப்புபண நடவடிக்கை மூலம் 1.3 லட்சம் கோடி கிடைக்கப்பெற்று உள்ளது.

பணமதிப்பு இழப்பிற்கு பின் 1 கோடி பேர் அதிக அளவில் வருமானவரி தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உற்பத்தி 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டும்.2022 ல் இந்திய அஸ்த்ரோனாட் விண்வெளிக்கு ஏவப்படும்,

வருமானவரி உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

64,587 கோடி ரூபாய் ரயில்வே பட்ஜெட்டிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

19,000 கோடி ரூபாய் கிராமப்புற சாலை மேம்பாட்டிற்காக ஒதுக்கபட்டு உள்ளது.

60,000 கோடி ரூபாயை மன்ரேகா திட்டத்தில் ஒதுக்கீடு செய்துள்ளது.

பணவீக்கம் 3.4% க்குள் இருக்குமாறு திட்டமிட்டுள்ளது.

மொத்த செலவு 3,36,292 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ல் எஸ்சி ஈஸ்டிக்கு 56,619 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. இந்த ஆண்டு அது 76,800 கோடியை எஸ்சி ஈஸ்டி நலனுக்காக ஒதுக்கி உள்ளது அரசு.

6.5 லட்சம் ஆண்டுவருமானம் வரை வருமானவரி கட்டத் தேவை இல்லை. அவர்கள் ப்ரோவிடன்ட் பண்ட் மற்றும் ஈக்குவிட்டி காண்பிப்பதாக இருந்தால் 6.5 லட்சம் வரை வரி கட்டத் தேவை இல்லை.

தற்போது 5 லட்சம் வருமானம் வாங்குபவர்கள் ஆண்டிற்கு 12500 ரூபாய் வரி செலுத்தி வந்தார்கள். தற்போது 0 வாக மாறி உள்ளது. மோடி அரசிற்கு இதன் மூலமாக நடுத்தர மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

வாடகை செலுத்துவதில்  1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சம் வரை விலக்கு அளித்துள்ளது அரசு.

வருமான வரி விலக்கால் 3 கோடி பேர் பலன் பெறுவர்.

6900 கோடி பெறுமானமுள்ள பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2 வீடுகளுக்கு கடன் வட்டிச் சலுகை தரப்பட்டுள்ளது.

மொபைல் போன் நிறுவனங்கள் 268 ஆக உயர்ந்துள்ளது

நன்றி ஒன் இந்தியா !

கருத்துரையிடுக

0 கருத்துகள்