6ம் வகுப்பு 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சிறந்த வண்ண சீருடைகள் !

6ம் வகுப்பு 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சிறந்த வண்ண சீருடைகள் வடிவமைத்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

அமைச்சரின் புதிய அறிவிப்பு..!   

தேனியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

5ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், 4 செட் வண்ண சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியார் மெட்ரிக் பள்ளிகளை மிஞ்சுகின்ற வகையில் சிறந்த வண்ண சீருடைகள் வடிவமைத்து தரப்படும். இந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்தவர்கள், படிக்கின்றவர்கள் மற்றும் 11ம் வகுப்பு படிக்கின்ற 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மடிக் கணினிகள் வழங்கப்படும். அவை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்