சாம்சங் காலக்சி ஃபோல்டு மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசி !

சாம்சங் காலக்சி ஃபோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்படுகிறது. முதலாவதாக சாம்சங் காலக்சி ஃபோல்டு 4ஜி அலைபேசி வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1980 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாயில் சுமார் 1,40,000 இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
சாம்சங் காலக்சி ஃபோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்படுகிறது. இரண்டு வகை அலைபேசிகளுமே 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் ஆகிய இரண்டு திரைகளை கொண்டுள்ளது.அதாவது, இந்த அலைபேசி மடித்த நிலையில் இருக்கும்போது, 4.6 இன்ச் கொண்ட சாதாரணமான அலைபேசி போன்று பயன்படுத்த முடியும். மடித்திருக்கும் அலைபேசியை விரிக்கும்போது 7.3 இன்ச் கொண்ட டேப்ளட்டாக மாறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் 4.3 இன்ச் திரையில் செய்துகொண்டிருக்கும் வேலையை, அலைபேசியை விரிப்பதன் மூலம் ஒரே நொடியில் 7.3 இன்ச் திரையில் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இந்த அலைபேசியின் பிராசசரை எந்த நிறுவனம் வடிவமைக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அது 7என்எம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசியின் சேமிப்பு திறனை பொறுத்தவரை, 12 ஜிபி ரேமும், 512 ஜிபி ராமும் கொண்டுள்ளது. குறிப்பாக அதிவேக தரவு பரிமாற்றத்திற்கு உதவும் யுனிவர்சல் பிளாஷ் ஸ்டோரேஜ் 3.0வை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

இந்த அலைபேசியில் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது புதுமையான சிறம்பம்சமாக கருதப்படுகிறது. அதாவது, 4.3 இன்ச் திரைக்கு தனியே ஒரு பேட்டரியும், 7.3 இன்ச் திரைக்கு மற்றொரு பேட்டரியும் என மொத்தம் 4,380 எம்ஏஎச் திறனை கொண்ட பேட்டரி உள்ளது.

அலைபேசியை கொண்டே தொழில்முறை புகைப்பட கலைஞர்களுக்கு சவால் விடுக்கும் இந்த காலத்தில், சாம்சங் காலக்சி ஃபோல்டு அலைபேசியில் மொத்தம் ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, 16 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ கேமரா ஆகியவை அலைபேசியின் பின்புறமும், அதுமட்டுமன்றி இரண்டு கேமராக்கள் அலைபேசியின் மற்றொரு திரையிலும் மற்றும் 10 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

சாம்சங் காலக்சி ஃபோல்டு அலைபேசியில் ஒரே நேரத்தில் மூன்று செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஆம், நீங்கள் யூடியூபில் காணொளி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சமயத்தில், அதே திரையில் வாட்ஸ்அப், கூகுள் குரோம் போன்ற இருவேறு செயலிகளை ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்