60 வயதுக்கு பிறகு ரூ. 3000 பென்ஷன்.. மத்திய அரசின் மெகா பென்ஷன் திட்டம்

டெல்லி: 60 வயதுக்கு பிறகு ரூ. 3 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆவது மக்களவையின் கடைசி மற்றும் 6-ஆவது பட்ஜெட்டை நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.   அந்த அமளிக்கு மத்தியில் பியூஷ் கோயல் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவர் கூறுகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ . 3000 பென்ஷன் கிடைக்கும். 29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும். 19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும். பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும். பணியின்போது இறக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு பணிக் கொடை வரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தி வழங்குப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்