விண்டோஸ் கம்ப்யூட்டரில் இருக்கும் அதர் யூசர் (Other User) பிழையை சரி செய்யலாம்.

விண்டோஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களில் புதிய பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை பயனரின் பெயரை மாற்றி, கம்ப்யூட்டரில் லாக் இன் செய்ய விடாமல் செய்கிறது. குறிப்பாக புதிதாக கம்ப்யூட்டரை செட்டப் செய்யும் போது இந்த பிழை ஏற்படுவதாக கூறப்படுகிறது. கம்ப்யூட்டரில் புதிய பயனரை உருவாக்கி, இயங்குதளத்தை மீண்டும் ரீ-இன்ஸ்டால் செய்யாமல் உங்களது தகவல்களை இயக்க எளிய வழிமுறை இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை சரியாக பின்பற்றி விண்டோஸ் கம்ப்யூட்டரில் இருக்கும் அதர் யூசர் (Other User) பிழையை சரி செய்யலாம். இதற்கு உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களையும் எடுத்துவிட வேண்டும். விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் கம்ப்யூட்டரில் இதே வழிமுறையை பின்பற்றி இருக்கிறோம். இந்த முறை சீராக வேலை செய்கிறது. இவ்வாறு செய்யும் முன் உங்களது தகவல்களை வெளிப்புற டிரைவிற்கு மாற்றிக் கொள்வது நல்லது. 

இந்த வழிமுறை விண்டோஸ் 7, 8 மற்றும் விண்டோஸ் 10 என அனைத்து இயங்குதளங்களை கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களிலும் வேலை செய்யும். இத்துடன் விண்டோஸ் 10 1809 அக்டோபர் பில்டிலும் இது வேலை செய்யும். 

அதர் யூசர் வழிமுறையை சரி செய்வதற்கான வழிமுறைகள்:

1 - கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஆன் செய்து லாக்-இன் பக்கத்திற்காக காத்திருக்க வேண்டும். 

2 - இனி Shift பட்டனை அழுத்திப்பிடித்து ரீஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 

3 - கம்ப்யூட்டரில் UEFI ஸ்கிரீன் வரும் வரை காத்திருக்கவும். 

4 - அடுத்து Troubleshooting ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 

5 - இனி Advanced Settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 

6 - கீபோர்டில் 4 பட்டனை க்ளிக் செய்து Safe Mode தேர்வு செய்ய வேண்டும். 

7 - கம்ப்யூட்டரில் Safe Mode வரும் வரை காத்திருக்கவும். 

8 - Safe Mode ஆப்ஷன் வந்ததும் Windows Key + R பட்டன்களை க்ளிக் செய்ய வேண்டும். 

9 - இனி netplwiz என க்ளிக் செய்ய வேண்டும். 

10 - அடுத்து அட்மின் பாஸ்வேர்டு கேட்கும் போது என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 

11 - இனி உங்களுக்கான அக்கவுண்ட்டை க்ளிக் செய்து அட்மின் அக்கவுண்ட் ஆக மாற்ற வேண்டும். 

12 - இனி Other User அக்கவுண்ட்டை அழிக்க வேண்டும். 

13 - கம்ப்யூட்டரை ரீபூட் செய்ய வேண்டும். 

14 - லாக் இன் பக்கத்தில் உங்களது பிரீ-செட் பாஸ்வேர்டை பதிவு செய்து கம்ப்யூட்டரை இயக்க வேண்டும். 

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை சரிவர பின்பற்றினால் உங்களது கம்ப்யூட்டரில் Other User பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்