ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு நிதி அதிகரிப்பு... ராணுவத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

டெல்லி : 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.

அதில், பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: இந்தநிலையில், ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு 35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு நிதி அதிகரிப்பு...  ராணுவத்திற்கு ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு 


பணிக்கொடை வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

முதல் முறையாக ராணுவத்திற்கு ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டதை கேட்டு 'ஜெய் ஜவான்' என பாஜக எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்