பட்ஜெட் 2019: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம்.. கடைசி நேரத்தில் விவசாயிகளை மகிழ்வித்த அரசு !

டெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். பாஜக ஆட்சியில் பணவீக்கம் 4.4 சதவீதமாக உள்ளது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குடும்பத்தினருக்கு செலவு அதிகரித்திருக்கும்.   குறைந்த செலவில் 143 கோடி எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டதால் அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. 2 ஹெக்டேர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அந்த உதவித் தொகை தலா ரூ. 2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவு ஏற்படும். இந்த உதவித்தொகை மூலம் 12 கோடி சிறு, குறு ,நடுத்தர விவசாயிகள் பயன்பெறுவர். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. 2022-விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 முதல் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஹரியானாவில் 22-ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் பியூஷ் கோயல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்