Business

தமிழ் வாழ்க !


இன்றைய 21-மார்ச்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.52 (லி) | டீசல் ரூ 70.50 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,056 | 24 காரட் 1கி ரூ 3,336 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 41,500 | டாலர் மதிப்பு 1$ = ரூ 68.60

போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் பறிமுதல் செய்ய பரிந்துரை

மதுரை : 'வாகனம் ஓட்டும் போது, மொபைல் போன் பயன்படுத்தினால், அதை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


வாகனம் ஓட்டும் போது பேசினால் மொபைல் பறிமுதல்?



மதுரையைச் சேர்ந்த, ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில், நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. டூ - வீலரில் செல்வோர் விதியை மீறுவதால், விபத்து அதிகரிக்கிறது. நீதிமன்றங்கள் பல வழிகாட்டுதல்களை

தெரிவித்தும், போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. விதி மீறுவோருக்கு அபராதத்தை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். வாகனம் ஓட்டும்போது, மொபைல் போனில் பேசினால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன விதிகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


நீதிபதிகள், கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன், மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'விதிமீறல் குறித்து, புகார் அளிப்பதற்காக போக்குவரத்து துறையால் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட எண், 94981 81457 எப்போதும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.


அதற்கு நீதிபதிகள், 'போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏன்? வாகனம் ஓட்டும் போது, மொபைல்போன் பயன்படுத்தினால், அதை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது?' என்றனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை, பிப்., 25க்கு ஒத்திவைத்தனர்.

நன்றி தினமலர் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்