Business

தமிழ் வாழ்க !


இன்றைய 15-ஏப்ரல்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.75 (லி) | டீசல் ரூ 69.96 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,031 | 24 காரட் 1கி ரூ 3,306.50 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 40,863 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.06

வங்கி கணக்கில் வாடிக்கையாளர் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு

கொச்சின் : கேரளாவைச் சேர்ந்த ஒருவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி கீழ்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.



இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வங்கி மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், அளித்த தீர்ப்பு வாடிக்கையாளருக்கு சேவை செய்யவே வங்கிகள் உள்ளன. , அவரது நலனை பாதுகாப்பது வங்கியின் கடமை. ஒருவரது வங்கி பணம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டால் அதற்கு வங்கியே பொறுப்பு. எனவே வங்கி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யபடுகிறது. இவ்வாறு அதிரடி தீர்ப்பு அளித்தார்.

நன்றி தினமலர் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்