சிறுகுறு நிறுவனங்களின் டிஜிட்டல்மயமாக்கல்..!

இந்தியாவில் உள்ள 20 துறைகளின் 2700க்கும் மேற்பட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை உள்ளடக்கி யெஸ் வங்கியால் நடத்தப்பட்ட ஆழ்ந்த கருத்துக்கணிப்பில், இத்துறையில் டிஜிட்டல் மயமாக்கக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது என்பது வெளியாகியுள்ளது. "சிறுகுறு நடுத்தர தொழில்துறையில் டிஜிட்டல்மயமாக்கலின் தாக்கங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வில், தொழில்நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை மேம்பாடுகளை பயன்படுத்துவதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் மற்றும் தடைகள் கண்டறியப்பட்டுள்ளன.சிறுகுறு நிறுவனங்களின் டிஜிட்டல்மயமாக்கல்..!

இந்த ஆய்வின் மூலம் பின்வருவனவை வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் பங்கேற்ற 60%க்கும் மேற்பட்ட சிறுகுறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் டிஜிட்டல் பயனர்கள் தான் என்றபோதிலும், 5% மட்டுமே முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். 50%க்கும் மேற்பட்ட டிஜிட்டல்மயமான சிறுகுறு நிறுவனங்கள், லாபத்திறன் அதிகரிப்பு, செயல்பாட்டுதிறன் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் மேலாண்மை போன்ற டிஜிட்டல்மயமாக்கலின் பலன்களை தெரிந்துவைத்திருந்தாலும், எப்படி செய்து மற்றும் திறமையான பணியாளர் குறைபாட்டால் தொழில்நுட்பத்தை பயன்படுத்திவதில் தோல்வியடைகின்றனர்.


அரசாங்கம், வங்கிகள், தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் இணைந்து, சிறுகுறு நிறுவனங்கள் வருவாய் அதிகரிக்க, செலவுகள் மற்றும் அபாயத்தை குறைத்தல் மற்றும் சந்தை பிரிவுகளை வேறுபடுத்த உதவுவதற்கான தேவை உள்ளது. மிகப்பெரிய டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து அதன்மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

தொழில் முனைவோர் மற்றும் உரிமையாளர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 'டிஜிட்டல் இந்தியா', 'ஸ்காலர் இந்தியா' மற்றும் 'தொடக்க இந்தியா' போன்ற ஏற்கனவே உள்ள முன்னெடுப்புகள் முழுமையாகப் பயனளிக்க வேண்டும் என்று ஆய்வுமுடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் , தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள், கல்வித்துறை மற்றும் சிறுகுறு நிறுவனங்கள் ஆகியவை டிஜிட்டல்மயமாக்கலில் முக்கிய பங்குவகிக்கின்றன.

நன்றி தமிழ் குட்ரிட்டன்ஸ் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்