உழவர் திருநாளான பொங்கலை கொண்டாடுவதற்கு பின்னிருக்கும் சுவாரசியமான காரணங்கள் என்ன தெரியுமா?

 ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் தாய் பண்டிகையான பொங்கலும், ஜல்லிக்கட்டும்தான். வருடம் முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் உழவை போற்றும் பண்டிகையான பொங்கல் எப்பொழுதுமே நமக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்ததுதான்.  பொங்கலை பண்டிகை என்பதை விட இதனை தமிழர்களின் திருவிழா என்றே சொல்லலாம். வருடம்தோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் இந்த பண்டிகை பல ஆயிரம் வருடங்களாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு உதவும் அனைத்து கடவுள்களுக்கும், பொருட்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த நான்கு நாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல அது தமிழர் கலாச்சாரத்தின் அசைக்க முடியாத அடையாளமும் ஆகும். இந்த பதிவில் பொங்கல் பற்றிய உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சூரியபகவான் பொங்கல் என்பதே உழவர் திருநாள்தான். உழவுக்கு உதவும் கடவுள் என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் சூரிய பகவான்தான். சூரியபகவானின் உழைப்பும், அருளும்தான் விவசாயிகளுக்கு அறுவடை செய்ய உதவுகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் வீட்டிற்குள் பொங்கல் வைக்காமல் வெளிப்புறங்களில் சூரிய பகவான் முன்னிலையில் பொங்கலை வைத்து அவரை வழிபட்டனர். 

பாரம்பரியம் பொங்கல் பண்டிகையானது மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பொங்கல் தமிழர்களால் வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ளது. சோழர்களின் கல்வெட்டில் அவர்கள் எப்போதிருந்து பொங்கலை வழிபட்டார்கள், எப்படி வழிபட்டார்கள், அவர்களின் முன்னோர்கள் எப்படி பொங்கலை வழிபட்டார்கள் என்ற அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்கள் விவசாயம் மூலம்தான் அனைத்து உணவுப்பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் அதில் சில பயிர்கள் மட்டும்தான் பணப்பயிர்கள் என்று அழைக்கப்படுகிறது. பணப்பயிர்களான கரும்பு, நெல், மஞ்சள் போன்றவை அனைத்தும் பொங்கல் மாதமான தை மாதத்தில்தான் அறுவடை செய்யப்படுகிறது. அதனால்தான் பொங்கல் எப்பொழுதும் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. பணப்பயிர்களை அறுவடை செய்வது அவர்களின் துயரங்களை போக்கும். நம் முன்னோர்கள் " தை பிறந்தால் வழி பிறக்கும் " என்று கூறவும் காரணம் இதுதான். 

  பொங்கலின் மகிழ்ச்சி தமிழில் பொங்கல் என்பதன் பொருள் " மகிழ்ச்சியின் பெருக்கம் " ஆகும். பொங்கல் என்பது நமது மகிழ்ச்சியின் அடையாளமாகவும், வேளாண்பொருட்களின் விளைச்சலின் எல்லையும் ஆகும். சூரியனுக்கு நன்றி சொல்லும் இந்த நாளை அனைத்து மக்களும் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். மக்கள் சாதி, மதத்தால் பிரிந்து விட கூடாது என்பதுதான் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் முதல் நோக்கமாகும். அந்த நோக்கத்தை பொங்கல் திருவிழா சிறப்பாக செய்கிறது. 

 இருந்தாலும் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பொங்கல் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. சில வடமாநிலங்களிலும் பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பீகாரில் பிகு என்றும், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உத்தராயன் எனவும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மாஃஹி எனவும் கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை பொங்கலுக்கு முன்னாடி நாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது தேவர்களின் அதிபதியான இந்திரனை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அறுவடைக்கும், செழிப்புக்கும் காரணமாக இருப்பவர் இந்திரன்தான். இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்வது பல நூறு ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வரும் ஒரு பழக்கவழக்கமாகும்.

 உங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் உபயோகமில்லாத பொருட்களை தீயிலிடுவது என்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி நல்ல சக்திகளை உங்கள் வாழ்க்கைக்கு வரவேற்பதற்காக நாடகப்படுவதாகும். பானை பொங்கல் விவசாயம் செய்ய சூரியனின் அருள் எவ்வளவு முக்கியமோ அதேயளவு நமது பூமித்தாயின் அருளும் முக்கியம். நமது பூமித்தாயை சிறப்பிக்கும் வகையில்தான் நமது முன்னோர்கள் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட பானையில் பொங்கலை வைத்து வழிபட்டனர். ஆனால் இப்போது காஸ் அடுப்பில் குக்கரில் பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் துர்பாக்கியமானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்