இந்தியாவில் விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவை துவங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவை துவங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவைக்கான எலக்ட்ரானிக் சிப் பொருந்திய ஈ-பாஸ்போர்ட்களும் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து. இந்த ஆண்டு முதல் பயனர்கள் ஈ-பாஸ்போர்ட்டு பயன்படுத்தி பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஈ-பாஸ்போர்ட் சேவை இந்த புதிய ஈ-பாஸ்போர்ட் சேவையின் மென்பொருள் ஐஐடி-கான்பூர் மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிய ஈ-பாஸ்போர்ட்டைப் பற்றி பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் இன்று பேசினார். மூன்று கட்ட ஒப்பந்தங்கள் அங்கீகாரம் இந்திய பாதுகாப்பு பிரஸ் (ஐஎஸ்பி), நாசிக்கு ஈ-பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான மின்னணு தொடர்பற்ற இணைப்புகள் கொள்முதல் செய்ய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்விஷயத்தில் ஐ.எஸ்.பி., நாசிக், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய மூன்று கட்ட ஒப்பந்தங்களைக் கொண்டு வருவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் முறையில் ஈ-பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் ஈ-பாஸ்போர்ட் சிப்களில் சேமிக்கப்படும். சிப் உடனான தகவல்களுடன் அசல் தகவல் ஒத்துப்போகாத நேரத்தில் கணினி பாஸ்போர்ட் அங்கீகாரம் வழங்கப்படாது. 

பாஸ்போர்ட்டின் அணைத்து தகவல்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. சிறிய சிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஈ-பாஸ்போர்ட் ஈ-பாஸ்போர்ட் தடிமனான முன் மற்றும் பின் அட்டைகளுடன் கூடிய சிறிய சிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்தியேக ஆண்டெனாவும் ஈ-பாஸ்போர்ட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டின் மென்பொருள் IIT- கான்பூர் மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது. இத்துடன் எந்த வெளி வணிக நிறுவனமும் சம்பந்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புகைப்படம் மற்றும் கைரேகை ஈ-பாஸ்போர்ட் சிப்பில் 64 கிலோபைட் வரை சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 வருகைகள் மற்றும் சர்வதேச இயக்கம் வரை சேமிக்கப்படும். உரிமையாளரின் விபரம், புகைப்படம் மற்றும் அவரின் கைரேகை அனைத்துத் தகவல்களையும் சேமிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஈ-பாஸ்போர்ட் இன் முதல் கட்ட சோதனை அமெரிக்காவில் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்