தமிழக டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சத்தியன் அசத்தல்.. சர்வதேச தரவரிசையில் புதிய சாதனை!

சென்னை : தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி சத்தியன் கடந்த ஆண்டில் பல முக்கிய தொடர்களில் வெற்றியை குவித்து வந்தார். சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் டேபிள் டென்னிஸ் வீரரான சத்தியன், டேபிள் டென்னிஸ் ஆடவர் தரவரிசையில் தன் அதிகபட்ச ரேங்க்கான 28வது ரேங்கை எட்டி அசத்தியுள்ளார். சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வென்ற சரத் கமல் 33வது இடத்தில் இருக்கிறார். இவர் இந்த முறை மூன்று இடங்கள் பின்தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் மணிகா பத்ரா தரவரிசையில் 47வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் மகளிர் பிரிவில் முதல்முறையாக முதல் ஐம்பது இடங்களுக்குள் இந்திய வீராங்கனை ஒருவர் இடம் பிடித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்