ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...!

விவசாயிகளின் உற்ற நண்பன் 'தென்னை' மரம். தலை முதல் கால் வரை தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானவை. ஓலை, துடைப்பம், இளநீர், தேங்காய், குடுவை, உரம், நார், கயிறு, விறகு, விசிறி போன்றவைகள் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கின்றன. ஓலையில் வீடு கட்ட, கட்டுமரம் செய்ய, கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுக்க என தென்னையிடம் இருந்து பெறப்படும் பயன்கள் ஏராளம். இதனால் விவசாயிகளுக்கும் பெரியளவில் தென்னை மரங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. தென்னிந்தியாவில் பெரும்பாலும் தென்னை மரங்களை காணலாம். தேங்காய் எண்ணெய்:

தென்னையில் இருந்து கிடைக்கப்பெறும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தேங்காய். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய உணவு மற்றும் மருந்துப் பொருளாக உள்ளது. ஏன், நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் பிரதான உணவு பொருளாகவும் தேங்காய் இருக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய 'மோனோலோரின்' எனும் பொருள் தேங்காயில் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி கேரளத்தில் தேங்காய் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. கேரளவைச் சுற்றியும் தென்னை மரங்கள் என்றிருக்க, அதனின் மகத்துவத்தை அறியாதவர்கள் அங்கு யாருமில்லை. அவர்களின் உணவு பொருட்களில் எது இல்லையென்றாலும் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கும். புரதச்சத்து நிறைந்த தேங்காயில் இருந்து பெறப்படும் எண்ணெய்யும் நமக்கான ஆரோக்கியத்தை தரக்கூடியவை.

நன்றி விகடன் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்