சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் மோடி அறிவிப்பு.!

இப்போது அனைத்து பயன்பாடுகளிலும் புதிய தொழிலநுட்பம் வந்து விட்டது என்று தான் கூறவேண்டும். அதன்படி சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தப்பேசிய பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், இப்போது சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறறோம், இது அனைத்து இந்திய தூதரகங்களும், தூணை தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும். ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும் மேலும் இது அனைவருக்கும் மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையை உறுதிப்படுத்தும், விசா, பியோ (இந்திய வம்சாவளி அடையாள அட்டை), ஓ.சி.ஐ (வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை அட்டை) ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களின் சமூக பாதுகாப்பு முறையுடன் இணைப்போம், இதன் மூலம் ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும். விசா பாஸ்போர்ட் முறையுடன் விசா வழங்கும் நடைமுறையையும் எளிமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், மின்னணு விசா-வில் அதிக நன்மை உள்ளது. 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும், அங்கு வாழ்கிற குடும்பங்கள் இந்தியா வந்து செல்வதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும. இது இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு உதவும். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்