Business

தமிழ் வாழ்க !


இன்றைய 25-மார்ச்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.67 (லி) | டீசல் ரூ 70.26 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,082 | 24 காரட் 1கி ரூ 3,362 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 41,500 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.12

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று ஐஒஎஸ் (ஐபோன்) இயங்குதளங்களில் மட்டும் செயலியில் பயன்படக்கூடிய வகையில் புதிய அம்சத்தை சேர்த்துள்ளது அந்நிறுவனம். தற்சமயம் வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு, இந்த செயல்முறை பல்வேறு ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். 



க்ரூப் கால் மேலும் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் இருந்து மேற்கொள்ளும் வசதியும், பின்பு வாய்ஸ் மெசேஜ்களை தொடர்சியாக பிளே செய்யும் வசதியும் வாட்ஸ்ஆப் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோன் சாதனத்தில் 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோ பின்பு வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் காலிங் சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயிலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். 

நான்கு பேர் குறிப்பாக வாட்ஸ்ஆப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு இந்த புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐஒஎஸ் வாட்ஸ்ஆப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கார் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் இதே அம்சங்கள் ஆண்ட்ராய்டு வாட்ஸ்ஆப் செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்