`உஷாரா இல்லைன்னா UPI-யும் ஆபத்துதான்!'... அடுத்தடுத்து நடந்த பணமோசடிகள்!

இன்று பெரிதும் பயன்படுத்தப்பட்டுவரும் UPI பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா? மோசடிகளில் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

நொய்டாவைச் சேர்ந்தவர் மோகன்லால். 30 வயதான இவரது வங்கிக் கணக்கிலிருந்து 6.80 லட்சம் ரூபாய் UPI மூலம் ஏமாற்றப்பட்டதாகப் புகார் தெரிவித்தார். தன்னிடம் ஸ்மார்ட்போனே இல்லையென்றும், பிறகு எப்படி தன் கணக்கிலிருந்து UPI மூலம் பணம் சென்று இருக்கும் என்ற கேள்வியை காவல்துறையிடம் கேட்டிருக்கிறார் அவர். இப்படி ஒருவருக்குத் தெரியாமலேயே UPI மூலம் பணம் எடுத்தது எப்படி? இந்தச் சம்பவத்தையடுத்து UPI பணப்பரிமாற்றத்தின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில் UPI பாதுகாப்பானதுதானா?

UPI 

செப்டம்பர் 29 தொடங்கி இப்போதுவரை 7 முறை இப்படிப் பணம் மாற்றப்பட்டுள்ளதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஏடிஎம் சென்றிருந்தபோதுதான் இதை அவர் கவனித்திருக்கிறார். தன்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் பணம் எடுத்தபோது அலர்ட் எதுவுமே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், சாதாரண மொபைலுக்கும் அலர்ட் மெசேஜ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றிப் பேசிய காவல்துறை இந்த வழக்கை சைபர் செல் உதவியுடன் விசாரிக்கப்போவதாகத் தெரிவித்தனர். இது எப்படி நடந்தது?

"இப்படி மோசடி செய்பவர்கள், எளிதாகச் சம்பந்தப்பட்டவரின் சிம் கார்டின் டூப்ளிகேட் ஒன்றை வாங்கி பழைய கார்டை டீ-ஆக்டிவேட் செய்துவிடுகின்றனர். புதிய கார்டை கொண்டு UPI ஆப்பில் லாகின் செய்துவிடுகின்றனர். பின்பு எளிதாகப் பணத்தை மாற்றிவிடுகின்றனர் என்கிறது" சைபர் செல் தரப்பு. இதற்கு Sim Swapping என்று பெயர்.

SBI

இப்போது விசாரணையில் மோசடியில் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்கள் எதுவென்று கண்டறியப்பட்டுவிட்டாலும், செய்தவர் யார் என்று தெளிவாகத் தெரியவரவில்லை. இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் எப்படி இந்த மூவரை மட்டும் குறிவைத்து மோசடி செய்துள்ளனர் என்ற காரணமும் தெரியவரவில்லை.

இந்த UPI தொடர்பான மோசடிகளில் தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்னைகளைவிட அதைப் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லாத மனிதர்களிடம்தான் அதிகப் பிரச்னைகள் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இதைப்போன்ற மோசடிகளிலிருந்து முடிந்த அளவு பாதுகாப்பாக இருக்க இவற்றைப் பின்பற்றுங்கள்.

அக்கவுன்ட் எண், டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்கள், பின் நம்பர், OTP போன்றவற்றை யாரிடமும் பகிரவேண்டாம். வங்கிகளும் இதையே வலியுறுத்துகின்றன. வங்கியைச் சேர்ந்த யாரும் இந்தத் தகவல்களை கேட்கமாட்டார்கள்

வங்கிக் கணக்குடன் லிங்க் ஆகியிருக்கும் சிம் கார்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சிம் இருந்தாலே மோசடி செய்வதில் அவர்கள் பாதிக் கிணற்றைக் கடந்துவிடவர். உங்களுக்குத் தெரியாமல் டீ-ஆக்டிவேட் ஆனால் உடனே என்னவென்று விசாரியுங்கள்.

முடிந்தளவு எஸ்.எம்.எஸ்.,ஸைப் பார்க்கும் வசதியை முக்கிய ஆப்களுக்கு மட்டும் கொடுங்கள். இதனால்கூட பிரச்னைகள் ஏற்படலாம்.

மேலும் பணப்பரிவர்த்தனைகள் வந்தால் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அலர்ட் வரும். இது வரவில்லையென்றால் வங்கியிடம் தொடர்புகொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இது இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமல் பணம் எடுத்தாலும் உங்களுக்குத் தெரியாமல் போய்விடும்.

UPI

டிஜிட்டல் இந்தியாவுக்கு நிறுவனங்களும் அரசும் ரெடியாகிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் சாமானிய மனிதனும் அதற்குத் தயாராக உள்ளனரா என்பதைப் பரிசீலனை செய்யவேண்டும். இல்லையென்றால் அதைப்பற்றிய போதிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே பலரின் கோரிக்கை. ஸ்மார்ட்போனே இல்லாதவர்கள் கணக்குகள் கூட மோசடிக்கு உள்ளாவதுதான் சோகம். இந்த வழக்கை விசாரித்துவரும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் ரிசர்வ் வங்கிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். இன்னும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். எனவே ஆபத்துகளை அறிந்து அலர்ட்டா இருங்க மக்களே!

நன்றி விகடன் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்