விவசாயிகளின் அலைச்சலுக்கு குட்பாய்.! இ-லோன் வழங்கும் எஸ்பிஐ.!

தற்போது விவசாயிகளுக்காக நவீன மின்னணு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி லோன் வழங்கும் முறையை கடைப்பிடிக்க துவங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. இதன் மூலம் விவசாயிகள் கால்கடுக்க காத்து நிற்க வேண்டியது அவசியம் இல்லை. அவர்களின் அலைச்சலுக்கும் குட்பாய் செல்லும் விதமாக தற்போது எஸ்பிஐ வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 
டிஜிட்டல் இந்தியா: 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏராளமான துறைகள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பொது மக்களும் அரசு அதிகாரிகளும் எந்த வித அலைச்சலும், தவிர்த்து கால விரயம் இன்றியும் செயல்பட முடியும். இடைத்தரகர்களும் இன்றியும் நேர்மையாகவும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். 

பிரதமர் மோடி: 

பிரதமராக பெறுப்பேற்ற மோடி. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகின்றார். மேலும், பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் புகுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் விரைவான நடவடிக்கைக்கும் அவர் விடுத்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவுகின்றது. 

ரயில் நிலையம்: 

ஏற்கனவே ரயில் நிலையம், பஞ்சாயத்து அலுவலகங்கள், பாஸ்போர்ட் மையம், அஞ்சலகம் உள்ளிட்ட அரசு துறைகளும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட்டு, மின்னணு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

எஸ்பிஐ திட்டம்: 

இதனிடையே, நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. இ-லோன் வழங்கும் எஸ்பிஐ: இதுதொடர்பாக பேசிய அந்த வங்கியின் வர்த்தகம் மற்றும் மின்னணு வங்கிப் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.கே. குப்தா, தற்போது ஏராளமான தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள் மின்னணு முறையில் கடன் வழங்கி வருவதாகத் தெரிவித்தார். ஈஸியாக கிடைக்கும்: மேலும் மாநில அரசுகளும் விவசாயிகளின் நில விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக கூறிய குப்தா, இதனைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அதிநவீன மின்னணு முறையில் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முயன்று வருவதாகக் குறிப்பிட்டார். 

சோதனையில் எஸ்பிஐ: 

இதற்காக பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சோதனை முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவிரைவில் சேவைக்கு வரும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்