உருவானது பேய்ட்டி புயல்.. சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !

சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக வடதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கடந்த வாரம் உருவான இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்தது. இந்த நிலையில் இது புயலாக மாறியுள்ளது. புயலாக வலுவடைந்தது கொஞ்சம் கொஞ்சமாக இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது.புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறியுள்ளது. இதற்கு பேய்ட்டி புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பேய்ட்டி புயலுக்கான பெயரை தாய்லாந்து வைத்தது. தீவிரம் அடையும் இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். ஆனால் கஜா புயல் அளவிற்கு இந்த புயலால் பாதிப்பு ஏற்படாது. அந்த அளவிற்கும் காற்றும் வீசாது. எங்கு கடக்கும் ஆந்திராவில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது. நாளை பிற்பகல் கரையை கடக்கும். 

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு மழை சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் கண்டிப்பாக இன்றும் நாளையும் மழை பெய்யும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்