பேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் !

அதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

பேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக சென்னையில் நாளை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

ஆந்திராவில் பேய்ட்டி புயல் கரையை கடக்க உள்ளது. நாளை பிற்பகல் கரையை கடக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும்.மிக அருகில் 

மிக அருகில்
இந்த புயல் இப்போது ஆந்திராவை விட சென்னைக்குத்தான் அருகில் இருக்கிறது. சென்னைக்கு இந்த புயலால் பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் சென்னைக்கு மிக அருகில் வந்துவிட்டு பின் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை 
கனமழை
இதனால் சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும் நாளையும் இந்த புயலால் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையை போலவே வடதமிழ்கத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


எங்கு உள்ளது 
எங்கு உள்ளது
இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இது சென்னையில் இருந்து 130 கிமீ தூரம் வரை நெருக்கமாக வரும் என்று கூறியுள்ளனர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் இருந்து விலகி ஆந்திரா நோக்கி செல்லும்.

காற்று வீசும் 

காற்று வீசும்
இந்த புயல் சென்னையை நெருங்கும் போது சென்னையில் பெரிய அளவில் காற்று வீச வாய்ப்புள்ளது. ஆனால் கஜா புயல் அளவிற்கு காற்று வீசாது. இந்த புயலால் சென்னை பெரிய அளவில் பாதிக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்