மீண்டும் புத்துயிர் பெற்ற ஜாவா பைக்; இம்முறை புது ஸ்டைல், அசத்தல் டெக்னாலஜி!

புதுடெல்லி: 20 ஆண்டுகளுக்கு பின், ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக மீண்டும் ஜாவா பைக்குகள் களமிறங்கியுள்ளன.இந்தியாவில் ஒருசமயம் மிகவும் கொண்டாடப்பட்ட பைக்குகளில் ஜாவா மாடலும் ஒன்று. 22 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கடைசி தயாரிப்பை நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் தனது வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் ஜாவா நிறுவனம் தனது புத்தம் புதிய பைக்கை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒருமாடலின் விலை ரூ.1.64 லட்சம் ஆகும். ஜாவா 42ன் விலை ரு.1.55 லட்சம். 

மேலும் பாப்பர் மாடல் ஜாவா பெராக் பைக்கின் விலை ரூ.1.89 லட்சம். இவற்றில் ஜாவா பெராக் மாடலின் விற்பனை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது புதிய முதல் மாடலுக்கு ‘ஜாவா’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. இதில் 300 சிசி ரெட்ரோ ஸ்டைல்டு க்ருசைர் உள்ளது. இந்த மாடல் ராயல் என்ஃபீல்டின் 350 சிசி ரக பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்குகிறது. 

ஜாவா 300 மாடல் பைக்குகள், 1970 - 80களில் இந்திய சாலைகளில் பயணித்த ஒரிஜினல் பைக்குகளை நமக்கு நினைவூட்டும். இருப்பினும் இதில் நவீன எஞ்சின், இயந்திர உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜாவா பிராண்டிற்கு கிளாஸிக் லெஜெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இது மகிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாகும். 


அதாவது கிளாஸிக் நிறுவனத்தின் 60% பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறது. எஞ்சிய பங்குகள் அனுபம் தரேஜா மற்றும் போமன் இரானி(ரஸ்டம் இரானியின் மகன்), ஐடியல் ஜாவாவின் நிறுவனர் ஆகியோருக்குச் சொந்தமாகும். ஒரிஜினல் மாடலை விட, புதிய ஜாவா பைக் சிறப்பான தயாரிக்கப்பட்டுள்ளது. இது அதிக ஆற்றல் மற்றும் குறைந்த புவி ஈர்ப்பு மையம் கொண்டது.

வட்டமான முகப்பு விளக்கு, பெண்டர்ஸ், பல்புவஸ் எரிபொருள் டேங்க், செயின் கார்டு, சீட் ஆகியவை பழைய லுக்கை நமக்கு அளிக்கிறது. இயந்திர ரீதியில் ஜாவா நவீன மோட்டார் சைக்கிள் என்பதில் சந்தேகமில்லை. இந்த பைக்கில் 293 சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்சின், 27 bhp மற்றும் 28 Nm பீக் டர்க்யூ திறனை வெளிப்படுத்துகிறது. 

இதன் மோட்டாரில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஜாவா எஞ்சினில் BS VI அம்சம் இருக்கிறது. எனவே எதிர்கால பயணத்திற்கு ஏற்றது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் போர்க்ஸ், பின்புறத்தில் கேஸ் சார்ஜிடு டுவின் ஷாக் அப்சார்பர்ஸ் உள்ளன. ஜாவா 300ல் முன்புறம் 280மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் இருக்கிறது. 

பிரேக்கிங் செட்-அப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக்கின் எடை 170கிமீ கொண்டது. சீட்டின் உயரம் 765 மிமீ ஆகும். வீல்பேஸ் 1,369மிமீ மற்றும் எரிபொருள் டேங்க் இருப்பு 14 லி ஆகும். ஜாவா பெராக்கில் ஜாவாவில் இருக்கும் அதே எஞ்சினுடன், 332சிசி, 30 bhp மற்றும் 31 Nm பீக் டர்க்யூ திறனை வெளிப்படுத்துகிறது. 


ஜாவா கருப்பு, கிரே, மரூன் ஆகிய 3 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேசமயம் ஜாவா 42 மாடலானது ஹல்லெ டீல், கேலக்டிக் க்ரீன், ஸ்டார்லைட் ப்ளூட் லுமோஸ் லைம், நெமுலா ப்ளூ, காமெட் ரெட் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்நிறுவனத்தின் டீலர்கள் மூலம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம். 


புதிதாக 105 டீலர்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளனர். இதன் டெலிவரி அடுத்த ஆண்டு முதல் கிடைக்கும். இதற்கான தயாரிப்பு தளம் மத்திய பிரதேச மாநிலம் புதாம்பூரில் அமைந்துள்ளது. ஜாவா இணையதளத்தில் ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்